பரிசு
எந்த ஒரு சந்தோஷமான விஷயம் என்றாலும், அம்மா, இங்க வந்து நில்லுங்களேன். அப்பா, இங்க வாங்களேன் என்று இரண்டு பேரையும் வர வைத்து. அவர்களை திகைக்க வைத்து. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்னு ஆரம்பிக்கறது தான் வழக்கம். இப்படி சொன்ன அடுத்த நிமிஷம். ஏன் சிந்து ஒன்னு மட்டும்...ரெண்டு மூணு கூட சொல்லுனு அம்மா சொல்லுவாங்க. இப்படி விளையாடினாலும் என் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் அவர்களையும் என்னோடு சேர்ந்து வியக்க வைக்கும். முதல் முதலாக பள்ளி போட்டியில் வெற்றி பெற்றதையும்… முதல் முதலாக நான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதையும் முதல் முதலாக வகுப்பில் presentation எடுத்ததையும் முதல் முதலாக கல்லூரியில் ஹோஸ்டிங் செய்ததையும்… முதல் முதலாக கவிதை கிறுக்கியதையும் முதல் முதலாக சுவையாக சமைத்ததையும் முதல் முதலாக இன்டெர்ன்ஷிப் கிடைத்த விஷயத்தையும்.. முதல் முதலாக வேலை கிடைத்த விஷயத்தையும் இவ்வாறு தான் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்…. இந்த மாதிரி எத்தனை யோ முதன்முதல் சந்தோஷத்தில் என்னுடன் இருந்து என்னை விட அதிகமான சந்தோஷம் அடைந்த என் அன்பான பெற்றோர்களே… முதன்முதல...