அவன் பார்வையில்... இவள்
அவன் பார்வைக்கு அவளோ! அலங்காரக்காரி. இவளுக்கு மட்டும் தானே தெரியும். இவள் அலங்காரம் எல்லாம் அவன் பார்வைக்கு மட்டுமே என்று. அவள் காதணி எப்போதுமே அவள் உடைக்கு மேட்சாகி இருக்கும். இவளுக்கு மட்டும்தானே தெரியும் கல்லூரி செல்லும் அவ ச ரத்தில் இவள் சிறந்த காதணியை தேர்வு செய்வதற்கு வண்ண வண்ண காதணியுடன் போராட்டம் நடத்துவது. அவள் மல்லிகை பூ வைத்து வருகையில் இவன் கண்களுக்கு ஸாஸ் டா!! தேவதை போலவே தெரிவாள் . ‘பூ’ வைத்து கல்லூரி செல்வதற்குள் இவள் படும் பாடு இவள் தாய்க்குத்தானே தெரியும். இவள் காலையில் ‘பூ’ வைத்து செல்வதற்கு முந்தைய நாளே அவளோ அல்லது அவள் தந்தையோ ‘பூ’ வாங்கி வர. அதை அவள் தாய் ஆங்காங்கே சிவப்பு நிற ரோஜாவை மல்லிப்பூவுடன் கட்டி அலங்கரித்து தயார் நிலையில் ஃப்ரிட்ஜில் வைத்து விடுவாள். ‘பூ’ வைப்பதற்கு ஏற்ப ஜடையை பின்னி ரப்பர் பேண்ட் போட்டு..... எல்லாம் ரெடி ஆகி ‘பூ’ மானு கத்த....ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து அந்த நேரத்துக்கு ஸ்லைடு பின்னை இவளும் அவள் அம்மாவும் சேர்ந்து தேடி . ஒருவழியாக அவள் தலையில் ‘பூ’வைத்து அவள் செல்வாள் அந்த மல்லிப் பூ வாசனை ...