ஏனோ…ஏக்கம்!
ஏனோ…ஏக்கம்! சிறு வயதில் எதுவும் பெரிதாக உணர்ந்ததில்லை. இப்போது என் சித்தி பிள்ளைகள் எங்கள் வீட்டில் தங்கி உள்ளார்கள். அவர்கள் செய்யும் குறும்புத்தனம் கண்டதாலோ என்னவோ என் மனதில் ஏக்கம்! ‘அண்ணா’ என்ற உறவைக் குறைத்து எடை போடவில்லை. இருப்பினும் இந்த உறவில் தனிப்பட்ட முறையில் என் மனம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. அந்த சில விஷயங்கள் நுழைந்தால் அந்த உறவின் தனிப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை… இருப்பினும் என் மனம் அந்த சிறு விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கிறது. ஒருவேளை அம்மா என் அண்ணனை 'அண்ணா' என்று கூப்பிடச் சொல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடவைத்திருந்தால் இப்படி ஏங்கி போயிருக்க மாட்டேனோ என்னவோ. என் சித்திகள் இருவருக்குமே இரண்டு பிள்ளைகள்- முதலாக பெண் குழந்தை இரண்டாவதாக ஆண் குழந்தை. அவர்கள் அக்கா- தம்பி ஆனார்கள். பேருக்கு தான் அக்கா-தம்பி, ஆனால் அவர்கள் பழகும் விதம் நண்பர்கள் போலவே இருக்கும். இரு சித்திமார்களுமே அவர்கள் மகன்களை 'அக்கா' என்று கூப்பிடச்சொல்லி பழக்கப்படுத்தவில்லை . இரண்டு தம்பிகளுமே அவர்கள் அக்காவை, சொந்தப் பெயர் வைத்து அழைக்காமல் செல்லப்...