அவன் பார்வையில்... இவள்
அவன் பார்வைக்கு அவளோ!
அலங்காரக்காரி.
இவளுக்கு மட்டும் தானே தெரியும். இவள் அலங்காரம் எல்லாம் அவன் பார்வைக்கு மட்டுமே என்று.
அவள் காதணி எப்போதுமே அவள் உடைக்கு மேட்சாகி இருக்கும்.
இவளுக்கு மட்டும்தானே தெரியும் கல்லூரி செல்லும் அவசரத்தில் இவள் சிறந்த காதணியை தேர்வு செய்வதற்கு வண்ண வண்ண காதணியுடன் போராட்டம் நடத்துவது.
அவள் மல்லிகை பூ வைத்து வருகையில் இவன் கண்களுக்கு ஸாஸ் டா!! தேவதை போலவே தெரிவாள்.
‘பூ’ வைத்து கல்லூரி செல்வதற்குள் இவள் படும் பாடு இவள் தாய்க்குத்தானே தெரியும். இவள் காலையில் ‘பூ’ வைத்து செல்வதற்கு முந்தைய நாளே அவளோ அல்லது அவள் தந்தையோ ‘பூ’ வாங்கி வர. அதை அவள் தாய் ஆங்காங்கே சிவப்பு நிற ரோஜாவை மல்லிப்பூவுடன் கட்டி அலங்கரித்து தயார் நிலையில் ஃப்ரிட்ஜில் வைத்து விடுவாள். ‘பூ’ வைப்பதற்கு ஏற்ப ஜடையை பின்னி ரப்பர் பேண்ட் போட்டு.....
எல்லாம் ரெடி ஆகி ‘பூ’ மானு கத்த....ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து அந்த நேரத்துக்கு ஸ்லைடு பின்னை இவளும் அவள் அம்மாவும் சேர்ந்து தேடி . ஒருவழியாக அவள் தலையில் ‘பூ’வைத்து அவள் செல்வாள் அந்த மல்லிப் பூ வாசனை மணக்க மணக்க...
பாதி நேரம் இவள் கைகளும் கால்களும் அமைதியாக இருக்காமல் கைகள் முடியை கிளறிக்கொன்டே இருக்க. கால் முன்னும் செல்லாமல் பின்னும் செல்லாமல் தடுமாறிக் கொண்டே தவிக்க. அவன் கண்களுக்கு இவள் நிதானமற்ற சிறு குழந்தை போல தெரிவாள். இவளுக்குத் தானே தெரியும், அவன் முன்னே செய்வது அறியாமல் இவள் மனம் படும் பாடை பற்றி.
அவள் அலங்காரத்தை முழுமை படுத்துவது, இரு புருவத்திற்கு நடுவே அவள் வைத்திருக்கும் ஸ்டிக்கர் பொட்டு.
தற்செயலாக பொட்டு தெரியாமல் கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும் என்பதை எண்ணி, இவள் தன் பர்சில் பொட்டு பாக்கெட்டையே வைத்திருப்பாள்.
அவள் கண்களை மேலும் அழகு படுத்த, கண்ணில் கருப்பு மை பூசியிருப்பாள்
இவளுக்குத்தானே தெரியும் அந்த அடங்காபிடாரி மையை இவள் வைப்பதே இவள் கண்களால் அவனைக் கட்டி வைக்கத்தான் என்று.
இவளுக்கு கண்களை அவ்வப்போது கசக்கும் பழக்கம் உண்டு. இவள் கண்களை கசக்கியதும் அந்த அடங்காபிடாரி மை கண்களில் இருந்து வெளியே வந்து, அது இவளை அலங்கோல படுத்திவிடும்.
அவளுக்கு heels காலணிகள் அணிவது பழக்கம் இல்லை. அவள் காலுக்கு பொருத்தமான flats காலணிகள் அணிந்து குதித்து குதித்து ஓடுவாள்.
இவளுக்கு heels காலணிகள் அணிவது மிகவும் பிடித்தவை. அதை விட இவளுக்கு அவன் பார்வையோடு இவள் பார்வையை மேலும் நிமிர்ந்து பார்க்காமல் கீழும் குனிந்து பார்க்காமல். கண்களோடு கண்களை சேர்த்து இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்ப்பது மிகவும் பிடிக்கும். heels காலணிகள் அணிந்து ஒருவேளை இவள் அவனைவிட உயரமாக தெரிந்தால் என்னாவது?
அவள் முகம் எப்போதும் பொலிவுடன் காணப்படும். பளபள வென்று!
இவளுக்குத்தானே தெரியும் அவள் எண்ணெய் வழியும் சருமத்தை பளபள வென்று வைக்க. அவள் அடிக்கடி முகத்தை கழுவுவதும் துடைப்பதுமாக இருப்பாள் என்று. இவள் இவள்மீதே அக்கறையாய் அதிக கவனம் செலுத்துவதற்கு இவன்தானே காரணம்.
இந்த அலங்காரம் தான் அவனுக்கு பிடிக்கும் என்று இந்த பைத்தியக்காரி நினைக்கிறாள்.
ஆனால் அவனுக்கு இவளை முதல் முறை
சாதாரணமாக சுடிதார் அணிந்து துப்பட்டாவை ஒரு பக்கம் மேலுமாக மறு பக்கம் கீழுமாக அண்ணா யூனிவர்சிட்டி சாலையை அவள் துப்பட்டா பெருக்கி செல்ல. கலைந்த தலைமுடியுடனும். எண்ணெய் வழிந்த முகத்துடனும் மை வைய்க்காமல் காதோடு ஒட்டி அணிந்த காதணியுடன் அவள் அம்மாவை எந்த ஒரு பையையும் தூக்க விடாமல், ஒரு shoulder bag மாட்டிக்கொண்டு. ஒரு கையில் கட்ட பையை பிடித்துக் கொண்டு மறு கையில் அவள் தாய் கையை பிடித்தவாறு செல்லும் போதே அந்த அன்பானவள் மீது அவன் காதலில் விழுந்தான்.

Love this Sindhuma :)
ReplyDelete😍💜
DeleteSemma semma Akka...😍😍♥️
ReplyDeleteThank u dr💜
DeleteGreat one akka! Loved it to the core!💙❤
ReplyDeleteThank u dr💝
DeleteWow super ka🤩🤩♥️♥️♥️♥️.
ReplyDeleteThank u ma💝
DeleteLast that red lines ... Semma writing ❤️
ReplyDeleteThank u sathya😍
DeleteBeautiful ♥️
ReplyDeleteThank uuu so much💝
DeleteSuperb Sindhu 💓💓💓
ReplyDeleteThank uuu💜
DeleteNyc da❤️😍
ReplyDeleteThank u so much😍
Delete