Posts

காதல்...

Image
  காதல் ஜன்னி இந்த காதல், ஜன்னி பிடிக்கின்ற அளவிற்கு என்னிடம் குளிரை உண்டாக்குகிறது.  போர்வையாக நீ வருவாயா?                                                                                                 போர்வையாக நீ வந்தால் ஜன்னியும் வரம் தான். காதல் காயம் காதல் தரும் காயம் ரணமாக மனதில் இருந்தாலும்...  உன் ஒரு துளி கண்ணீரில் அனைத்தும் மறைந்து போகுதே...  அது வெறும் கண்ணீரா? அல்லது வலியை போக்கும் மருந்தா?     காதல்  கண்ணாமுச்சி காதலை தொலைத்து வாழ்வதற்கு... காதலில் தொலைந்தே வாழலாம். காதல் போதை நேத்து ராத்திரி குடித்த குடியில் இருந்து வெளியே வருவதற்கு தேவை லெமன் சோடா.... நேத்து...

பரிசு

Image
எந்த ஒரு சந்தோஷமான விஷயம் என்றாலும், அம்மா, இங்க வந்து  நில்லுங்களேன். அப்பா, இங்க வாங்களேன் என்று இரண்டு பேரையும் வர வைத்து. அவர்களை திகைக்க வைத்து. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்னு ஆரம்பிக்கறது தான் வழக்கம். இப்படி சொன்ன அடுத்த நிமிஷம். ஏன் சிந்து ஒன்னு மட்டும்...ரெண்டு மூணு கூட சொல்லுனு அம்மா  சொல்லுவாங்க. இப்படி விளையாடினாலும் என் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் அவர்களையும் என்னோடு  சேர்ந்து வியக்க வைக்கும். முதல் முதலாக  பள்ளி போட்டியில் வெற்றி பெற்றதையும்… முதல் முதலாக நான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதையும் முதல் முதலாக வகுப்பில் presentation எடுத்ததையும் முதல் முதலாக கல்லூரியில் ஹோஸ்டிங் செய்ததையும்… முதல் முதலாக கவிதை கிறுக்கியதையும் முதல் முதலாக சுவையாக சமைத்ததையும் முதல் முதலாக இன்டெர்ன்ஷிப் கிடைத்த விஷயத்தையும்.. முதல் முதலாக வேலை கிடைத்த விஷயத்தையும் இவ்வாறு தான்  சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்…. இந்த மாதிரி எத்தனை யோ முதன்முதல் சந்தோஷத்தில் என்னுடன் இருந்து என்னை விட அதிகமான சந்தோஷம் அடைந்த என் அன்பான  பெற்றோர்களே… முதன்முதல...

அவன் பார்வையில்... இவள்

Image
அவன் பார்வைக்கு அவளோ!  அலங்காரக்காரி. இவளுக்கு மட்டும் தானே தெரியும். இவள் அலங்காரம் எல்லாம் அவன்  பார்வைக்கு மட்டுமே என்று. அவள் காதணி எப்போதுமே அவள் உடைக்கு மேட்சாகி இருக்கும். இவளுக்கு மட்டும்தானே தெரியும் கல்லூரி செல்லும் அவ ச ரத்தில் இவள் சிறந்த காதணியை தேர்வு செய்வதற்கு வண்ண வண்ண காதணியுடன் போராட்டம் நடத்துவது. அவள் மல்லிகை பூ வைத்து வருகையில் இவன் கண்களுக்கு ஸாஸ் டா!! தேவதை போலவே தெரிவாள் . ‘பூ’ வைத்து கல்லூரி செல்வதற்குள் இவள் படும் பாடு இவள் தாய்க்குத்தானே தெரியும். இவள் காலையில் ‘பூ’ வைத்து செல்வதற்கு முந்தைய நாளே அவளோ அல்லது அவள் தந்தையோ ‘பூ’ வாங்கி வர. அதை அவள் தாய் ஆங்காங்கே  சிவப்பு நிற ரோஜாவை மல்லிப்பூவுடன் கட்டி  அலங்கரித்து தயார் நிலையில்  ஃப்ரிட்ஜில் வைத்து விடுவாள். ‘பூ’ வைப்பதற்கு ஏற்ப ஜடையை பின்னி ரப்பர் பேண்ட் போட்டு..... எல்லாம் ரெடி ஆகி ‘பூ’ மானு கத்த....ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து அந்த நேரத்துக்கு ஸ்லைடு பின்னை இவளும் அவள் அம்மாவும் சேர்ந்து தேடி . ஒருவழியாக அவள் தலையில் ‘பூ’வைத்து அவள் செல்வாள் அந்த மல்லிப் பூ வாசனை ...

ஏனோ…ஏக்கம்!

Image
ஏனோ…ஏக்கம்! சிறு வயதில் எதுவும் பெரிதாக உணர்ந்ததில்லை. இப்போது என் சித்தி  பிள்ளைகள் எங்கள் வீட்டில் தங்கி உள்ளார்கள். அவர்கள் செய்யும் குறும்புத்தனம் கண்டதாலோ என்னவோ என் மனதில் ஏக்கம்! ‘அண்ணா’ என்ற உறவைக் குறைத்து எடை போடவில்லை. இருப்பினும் இந்த உறவில் தனிப்பட்ட முறையில் என் மனம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. அந்த சில விஷயங்கள் நுழைந்தால் அந்த உறவின் தனிப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை… இருப்பினும் என் மனம் அந்த சிறு விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கிறது. ஒருவேளை அம்மா என் அண்ணனை 'அண்ணா' என்று கூப்பிடச் சொல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடவைத்திருந்தால் இப்படி ஏங்கி போயிருக்க மாட்டேனோ என்னவோ.   என் சித்திகள் இருவருக்குமே இரண்டு பிள்ளைகள்- முதலாக பெண் குழந்தை  இரண்டாவதாக ஆண் குழந்தை. அவர்கள் அக்கா- தம்பி ஆனார்கள். பேருக்கு தான் அக்கா-தம்பி, ஆனால் அவர்கள் பழகும் விதம் நண்பர்கள் போலவே இருக்கும்.   இரு சித்திமார்களுமே அவர்கள் மகன்களை 'அக்கா' என்று கூப்பிடச்சொல்லி பழக்கப்படுத்தவில்லை . இரண்டு தம்பிகளுமே அவர்கள் அக்காவை, சொந்தப் பெயர் வைத்து அழைக்காமல் செல்லப்...

கனா

Image
ஜனவரி 24ஆம் தேதி! இரவு 8 மணி அளவில் ஏதோ ஒரு நினைப்பில் முகநூலிலைப் புரட்டியப்படி நான். சூரியன் எப் எம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட அதை ஆர்வத்துடன் படித்தேன். உங்கள் குறல் சென்னையின் குறலாக ஒலிக்க ஆசையா ?? என அதிலிருந்ததைப் பார்த்த உடனே திடிரென்று மனதில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் சந்தோஷப்பட்டேன். இந்த திடீர் சந்தோஷத்துக்கு காரணம் என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் தான். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது டிவி இணைப்பு வீட்டில் கட் செய்யப்பட்டது. மொபைலில் இரவு 9 மணி அளவில் FM  கேட்டுக்கொண்டே ரெக்கார்டு எழுதுவேன். அப்போது நான் விரும்பி கேட்பது லவ் குரு நிகழ்ச்சி தான்.அந் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்க மூன்று விஷயங்கள் காரணமாக இருந்தது. 1. அந்த நிகழ்ச்சி அன்பையும், காதலையும் மையமாக கொண்டது. 2. அதில் படிக்கப்படும் கடிதங்கள் அனைத்திலும் காதலின் வலி அடங்கி இருக்கும். 3. தந்தை-மகள் அன்பு, பிரியமுடியாத நண்பர்களின் பாசம் மற்றும் உறவுகளின் புனிதம் கொண்டவை.   நான் என்னையே அறியாமல் லவ் குருவின் வார்த்தையை ரசிக்க ஆரம்பித்தேன். FM-இல் பாடலை ரசிப்பதை விட காத்திருந்து லவ்...