காதல்...

 



காதல் ஜன்னி

இந்த காதல், ஜன்னி பிடிக்கின்ற அளவிற்கு என்னிடம் குளிரை உண்டாக்குகிறது.  போர்வையாக நீ வருவாயா?                                                                                                
போர்வையாக நீ வந்தால் ஜன்னியும் வரம் தான்.


காதல் காயம்

காதல் தரும் காயம் ரணமாக மனதில் இருந்தாலும்...  உன் ஒரு துளி கண்ணீரில் அனைத்தும் மறைந்து போகுதே... 

அது வெறும் கண்ணீரா? அல்லது வலியை போக்கும் மருந்தா?

 

 காதல் கண்ணாமுச்சி

காதலை தொலைத்து வாழ்வதற்கு...

காதலில் தொலைந்தே வாழலாம்.


காதல் போதை

நேத்து ராத்திரி குடித்த குடியில் இருந்து வெளியே வருவதற்கு தேவை லெமன் சோடா....

நேத்து ராத்திரி, என்னவன் பேசிய காதல் வார்த்தையில் இருந்து என்னை வெளியே கொண்டுவர ஏதேனும் உண்டா?



காதல் காத்திருப்பு

காதலுக்கு அழகு காதலுக்காக காத்திருத்தல். இந்த அழகை நான் ரசிப்பதற்காகவோ! 
என் காதலி, அவள் காதல் சம்மதம் சொல்லாமல் என்னை காக்க வைக்கிறாள்.

காதல் பிரிவு

அதிகமாக இந்த ஊர் அடங்கில் காதலர்கள் பகிர்ந்து கொண்ட வார்த்தை        Miss You...

இந்த கொஞ்சக் காலப் பிரிவை தாங்க முடியாத காதலர்கள். காதல் பிரிவை எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள்?


This is Part1... Next part is coming soon.... 

காதல் தொடரும்...

Comments

Popular posts from this blog

அவன் பார்வையில்... இவள்

ஏனோ…ஏக்கம்!