கனா

ஜனவரி 24ஆம் தேதி! இரவு 8 மணி அளவில் ஏதோ ஒரு நினைப்பில் முகநூலிலைப் புரட்டியப்படி நான். சூரியன் எப் எம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட அதை ஆர்வத்துடன் படித்தேன்.

உங்கள் குறல் சென்னையின் குறலாக ஒலிக்க ஆசையா ??


என அதிலிருந்ததைப் பார்த்த உடனே திடிரென்று மனதில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் சந்தோஷப்பட்டேன். இந்த திடீர் சந்தோஷத்துக்கு காரணம் என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் தான். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது டிவி இணைப்பு வீட்டில் கட் செய்யப்பட்டது. மொபைலில் இரவு 9 மணி அளவில் FM  கேட்டுக்கொண்டே ரெக்கார்டு எழுதுவேன். அப்போது நான் விரும்பி கேட்பது லவ் குரு நிகழ்ச்சி தான்.அந் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்க மூன்று விஷயங்கள் காரணமாக இருந்தது.

1. அந்த நிகழ்ச்சி அன்பையும், காதலையும் மையமாக கொண்டது.

2. அதில் படிக்கப்படும் கடிதங்கள் அனைத்திலும் காதலின் வலி அடங்கி இருக்கும்.

3. தந்தை-மகள் அன்பு, பிரியமுடியாத நண்பர்களின் பாசம் மற்றும் உறவுகளின் புனிதம் கொண்டவை.

 

நான் என்னையே அறியாமல் லவ் குருவின் வார்த்தையை ரசிக்க ஆரம்பித்தேன். FM-இல் பாடலை ரசிப்பதை விட காத்திருந்து லவ் குருவின் குரலை கேட்டேன்.

 

பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் ஒரு நாள் நானே என்னை RJ ஆக நினைத்து பேசி ஆடியோ ரெக்கார்டு  செய்தேன். தம்பியை காலர் ஆக நடிக்க வைத்து விளையாடினேன். நான் தான் உங்கள் சுவீட்டி சிந்து என்று அடைப்பெயர் எல்லாம் வைத்துக்கொண்டேன். நான் பேசிய ஆடியோ ரெக்கார்டிங்கை வீட்டில் இருக்கும் அனைவரையும்  கேட்க வைத்தேன். ஆர்ஜே ஆகட்டும்மானு வீட்டில் கேட்டேன், அதுக்கு வீட்டில் ஆர்ஜே கோர்ஸ் போகனும்னு சொன்னாங்க. லீவ்ல போரேனு சொல்ல, அப்பா விசாரிச்சிட்டு வந்தாங்க, இரண்டு வருஷம் கோர்ஸ்  தான் போகனுமாம் சிந்து அதெல்லாம் நமக்கு செட் ஆகாதுமா...நீ ஒழுங்கா காலேஜ் போய்ட்டு படினு சொல்லி முடிச்சுட்டாங்க. அண்ணா யூனிவர்சிடில Electronics Media கோர்ஸ் ஜாயின் பண்ணுறேனு சொன்னேன். ஆனா, அப்பா அப்ளிகேஷன் பார்ம் கூட வாங்கிதரல. இப்போ யோசிக்கிரேன் ஏன் அப்போ அடம்பிடிக்கலனு. மோஸ்டா எதுக்குமே அடம்பிடிச்சதில்ல நான். ஒரு விஷயம் வேண்டாம்னு விளக்கி சொன்னா நான் புரிஞ்சிப்பேன். சிந்து ரொம்ப நல்ல பொண்ணு, எது சொன்னாலும் புரிஞ்சிப்பானு சொல்லியே என்னை எதையும் இரண்டாவது முறையாக கேட்க விடாம செஞ்சிட்டாங்க. ஆனா, இப்போ யோசிக்கிறேன் நான் அப்போ கெட்ட பெண்ணாகவே இருந்திருக்கலாமென்று. நமக்கு ஒரு விஷயம் வேணும்னா, அத நம்மளால செய்ய முடியும்னு நம்பனும்.  அதுக்காக அடம்பிடிக்கனும். அப்படிப்பட்ட அடம்பிடிப்பு  தப்பே இல்லை.

 

ஒரு வழியாக  CEGல வேற கோர்ஸ்ல  ஜாய்ன் பண்ணிடேன். CEGயின் அழகை ரசிப்பதிலேயே நாட்கள் கடந்துவிட்டன. ஒருநாள் பாட்டிக்கு துணையா டாக்ஸியில் போயிட்டு இருக்கப்போ  ரேடியோ போட்டிருந்தாங்க ரொம்பநாள் கழிச்சு கேட்டேன். திடீர்னு ஒரு அட்வர்டைஸ்மன்ட் RJ HUNTல் பார்ட்டிசிபேட் பண்ணனும்னா இந்த நம்பர்க்கு மிஸ்சுடுகால் குடுங்கனு..

 


சிறு தயக்கத்துடன் உடனே கையில் இருந்த ஃபோனில் இருந்து மிஸ்சுடுகால் கொடுத்தேன். இதுவே நான் Rjஆக நினைத்து வைத்த முதல் அடி. ஒரு நிமிடம் ஆடியோ அனுப்ப சொன்னாங்க. கற்பனையில் ஒரு கதையை உருவாக்கி பேசிய ஆடியோவை  அனுப்பினேன். அந்த கதையில் என் கற்பனை திறன் மட்டும்தான் காட்டியதோ என்னவோ நான் செலக்டாகவில்லை.

 

இப்போது சூரியன் FM கதைக்கு வருவோம் மனதில் ஒரு விதமான தயக்கம் ஆடிஷன் போலாமா வேண்டாமானு? அம்மா அப்பா கிட்ட எதுக்கோ ஒரு வார்த்தை சொல்லி வெப்போம்னு சொன்னேன். அதிகாலை எழுந்த உடன் அம்மாவிடம் ஆடிஷ்ஷன் போறேனு சொல்லிட்டு, எனக்கு பிடித்த உடையை உடுத்தி கொண்டேன். “அப்பாவையும் கூட்டிட்டுபோனு” அம்மா சொல்ல. வேண்டாம்மானு தனியா புறப்படடேன்.

 

தனியாக பயணிப்பது மிகவும் பிடித்த விஷயம். முரசொலி மாறன் டவர்சை நோக்கி என் பயணம் துடங்கியது. “அந்த சந்துக்குள்ள போமானு” வழி சொல்லி அனுப்பி வைத்த பஸ் கண்டக்டருக்கு நன்றி. எனக்கு முன்னாடி முகத்தை துணியில் மறைத்துக்கொண்டு முரசொலி மாறன் டவர்ஸ் உள்ளே ஒரு பெண் சென்றாள். நானும் அவளை தொடர்ந்து சென்றேன்.அவள் என்னை பார்த்து கேட்டால்,  நீங்களும் ஆடிஷ்ஷன் வந்திங்களா? "ம்ம்ம்" என்று தலையை அசைத்தேன். நாங்கள் இருவரும் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து உள்ளே சென்றோம்.

மொத்தமா 200 பெண்கள் அந்த அறையில் இருந்தோம். சலசலப்புடன் கலகலப்பும் சேர்ந்து இருந்தது. ஆர்ஜே ஆடிஷ்ஷன் ஆச்சே சும்மாவா? நண்பராக வராமல் இருந்தாலும் நண்பர்களாகி பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். எந்த ஒரு நபரிடமும் நானாக உரையாடலை துவங்கவில்லை. இதில் இருந்து ஒன்று அறிந்து கொண்டேன்.‌ அவங்களும் நம்மை போன்றவர்கள் என்று. ஐ மீன் 'எக்ஸ்ட்ரோவர்ட்ஸ்'. எல்லாருக்கும் டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது. ஒருவர் ஒருவராக ஆடிஷ்ஷன் ரூம் சென்றார்கள். என்னுடைய டர்ன் வந்தது.

 

ஆடிஷ்ஷன் அறையில் நுழைந்தவுடன் நான் அங்கு இருப்பவர்களை பார்த்து புன்முறுவல் செய்தேன். “சொல்லுங்க லக்க்ஷ்மினு” கணீர் குரல்ல என் முன்னே இருந்த நபர் சொன்னார். நானா லக்ஷ்மி ? நான் தான் 'ஆர்ஜே லக்ஷ்மி' என மனதில் நினைத்துக் கொண்டேன். லக்ஷ்மி நீங்க தர்பார் படம் முதல் ஷோ பாத்துடீங்கனு நினைச்சுகோங்க. இப்போ தியேட்டர் வாசல்ல நீங்க நிக்கறீங்கனு. அவர் லயின்ல இருக்கற மாதிரியே பேச..."நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது சூரியன் எப் எம் 93.5 லகஷ்மி என்ன விட்டுட்டு நீ மட்டும் தர்பார் படத்துக்கு போயிட்ட படம் எப்படி இருந்துச்சினு சொல்லு..." நீதான் படத்துக்கு வரமாட்டேனு பில்டப்லா பன்ன...தலைவர் படம்னா சும்மாவா வேற லெவல்ல இருந்துச்சு அப்பா பொண்ணு சென்டிமென்ட் சீன்லலா கண்ல தண்ணி வந்துருச்சுப்பானு” லோக்கல் தமிழ்ல ரொம்ப கேசுவலா பேசினோம்.

 

லக்ஷ்மி அடுத்து, நீங்க ஒரு நயிட் ஷோ பண்றீங்க. ஒரு நபர் லெட்டர் எழுதியிருக்கிறார். நீங்க ஷோல சொன்ன ஆறுதல் வார்த்தைலதான் நான்  உயிரோடு இருக்கிறேனு. அத படிச்சிட்டு நீங்க எப்படி ரியாக்ட் பன்னுவீங்க ?

 

மனசுக்குள்ள ஒரு  இனம் புரியாத சந்தோஷம் நம்ப வார்த்தையால ஒருத்தவங்க உயிரோட இருக்காங்கனு நினைக்கறப்போ. நான் கண்களை மூடி பேசிய வார்த்தைகள். " சந்தோஷ் (எனக்கு பிடித்த பெயரை சொல்லி நான் பேச ஆரம்பித்தேன்) என்ன சொல்றதுனே தெரியல. என்னிக்கோ நான் பேசின ஆறுதல் வார்த்தை, உங்கள உயிர் வாழ வச்சிருக்குனு நினைக்கறப்போ.... அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்க இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும். வாழ்க்கையில் நிறைய சாதிக்கனும் சந்தோஷ்.."

 

ஏதோ உண்மையாவே ஆர்ஜே ஆன மாதிரியும். ஒருத்தர் நம்ப பேச்சால உயிர் வாழ்ந்தமாதிரி ரொம்ப பாசிட்டிவ்வா பேசினேன். உண்மையா சொல்லனும்னா நான் அந்த இரண்டு நிமிஷம் ஆர்ஜேவாவே வாழ்ந்தேனுதான் சொல்லனும். கண்களைத் திறந்து பார்த்தேன். நீங்க நெக்ஸ்டு ரவுண்டுக்கு வெயிட் பன்னுங்கமானு சொன்னாங்க.

 

திரும்பவும் வைட்டிங்  ஹாலுக்கு போனேன். யார்கிட்டையும் பேச தோனல. அந்த இரண்டு நிமிஷத்திலிருந்து என்னால வெளில வர முடியலனுதான் சொல்லனும் முதல் ரவுண்டுக்கு முன்னால என் கூட பேசின தோழிகள் செலக்ட்டு ஆகல.

 

செக்கன்ட ரவுண்டுக்கு சினிமா செய்தியை குவித்து வெச்சிருக்க ஒரு புது தோழி கிடச்சா. அவள பத்தி சொல்லனும்னா கொஞ்சம் கூட நிறுத்தாம விடாம பேசிட்டே இருக்ககூடிய விஸ்காம் படிச்சு காதல் திருமணம் செஞ்சிட்டு கலகலனு பேசுர பெண்.  ஆர்ஜே தான் ஆகனும்னு கனவோட இருக்கிறவள்.

அவள் பிரிபேர் பன்னுறத பாக்கறப்போ நமக்கும் சினிமா செய்திக்கும் தூரமாச்சேனு பயந்தே போனேன். ஐந்து பேர் கொண்ட குழுவாக மாறி எக்கச்சக்கமா பேச ஆரம்பிச்சோம் ஏதோ பத்து வருஷம் பழகிய நண்பர்கள் போல் நாங்கள் பேசினோம். அதை இப்போ நினைச்சா கூட இனிக்குது. நாங்கள் ஒரு ஒருவராக உள்ளே சென்றோம். செகண்ட் ரவுண்ட் ரொம்ப ஜாலியா போச்சு. உள்ளே நுழைந்தவுடன் அங்கு இருப்பவர்களை கண்டு புன்முறுவல் செய்தேன். ஏனோ அங்கு கலகலப்பும் சிரிப்பும் நிறைந்து இருந்தது. அண்ணா யூனிவர்சிட்டில படிச்சிட்டு ஏன் இங்க வந்திங்கனு கேட்டாங்க. RJ ஜாக்கி ஆகணும் னு கனவு! அதனால்தான் வந்தேன் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு உற்சாகத்தோடு சொன்னேன்.

 

ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து இங்கிலிஷ் புரோனுன்சியேஷன் எப்படி இருக்குனு தெரிஞ்ஞிகிட்டாங்க. அப்புறம் ஜாலியா நிறைய பேசினோம். நீங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிருங்கனு சொன்னாங்க. அடுத்த ரவுண்டுதான் கடைசி ரவுண்ட். நம்ப எப்படி பேசுறோம், நம்ப குரல் எப்படி இருக்கு. ஒரு விஷயத்தை நம்ப எப்படி எளிமையா சொல்கிறோம் . தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்கு. நம்ப  வாய்ஸ்… வாய்ஸ் பேங்க்ல இல்லாத வாய்ஸ்ஸசா இருக்கணும்னு. நிறைய கிரைடிரியா பிக்ச் பண்ணியிருந்தாங்க. எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டு கடைசி ரவுண்டுக்கு குடுத்த தலைப்புக்கு ரெடி ஆகிட்டு இருந்தோம். “மார்கழி மாதம்". இந்த டாப்பிக்கு தயாராக பத்து நிமிடம் கொடுக்க பட்டது. எல்லாரும் பென்சில் அல்லது பென் மற்றவங்களிடமிருந்து கடனும் வாங்கி எழுத ஸ்டார்ட் பன்னாங்க. யாருமே கையில போன் இருந்தும் யூஸ் பன்னல. நானோ இரண்டு பென்சில், ஒரு பென், ஒரு ஸ்டிக்நோட் வைத்திருந்தேன். பென்சில் மற்றவருக்கு கொடுத்து உதவினேன். எழுத பேப்பர் இல்லாதவங்களுக்கு பேப்பர் தரப்பட்டது. கலகலனு பேசீட்டு இருந்த ரூம்ல திடீர்னு அமைதி ஏற்ப்பட்டது. பத்து நிமிஷம் கழிச்சி எப் எம் ரூம்க்கு கூட்டிட்டு போனாங்க. ஒரு ஒருத்தரா வாய்ஸ் ரெகார்ட் பன்ன கூப்டாங்க. ஒரு பெண் முதலாக உள்ளே போக, நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அங்க இருந்த ஜன்னல் வெளியே பார்த்தா கண்ணே பறிபோர அளவுக்கு அவ்வளவு அழகான காட்சி. அதை பார்த்து திகைத்து போனதை விட, அந்த காட்சியை பார்த்து முகத்தில் சிரிப்புடன் இருக்கும்  ஒரு பெண்ணை பார்த்து வியந்தேன். அந்த ஜன்னலின்  வழியே தெரியும் சீன்னரியை கண்டு ரசித்து ரசித்து கவனத்தை தலைப்பில் வைத்து எழுதினால். அப்போது எனக்கு ஒரு நியாபகம் நினைவில் வந்தது. ஒருநாள் ட்ரெயின் ஜன்னல் சீட்டில் இருந்து, காதுல எட்செட் வெச்சி பாட்டு கேட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இயற்கையை ரசித்துக்கிடயே வந்தேன். “சிந்து டிரெயின்ல இப்படி எங்கேயோ வேடிக்கை பார்த்து சிரிச்சிட்டு வராதனு” அதட்டினாங்க அம்மா. அப்போ நாங்க ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்ல  இருந்தோம் அதுனால அம்மா அப்படி சொல்றாங்கனு நினச்சு விட்டுடேன். இப்போதுதான்  புரிந்தது நான் அந்த பெண்ணை பார்த்து வியந்து போனபடி யாராவது என்ன கவனித்திருக்கலாம்னு.  அந்த இயற்க்கையைப் பார்த்து ரசிச்சு எழுதுற பெண் ரொம்ப அழகாக என் கண்ணுக்கு தெரிந்தால். ஒரு ஜாக்கிக்கு எல்லாத்தையும் ரசிக்க தெரியனும், குட்டி குட்டி சந்தோஷம் உருவாக்கவும் தெரியனும். முக்கியமா காதலிக்கவும் தெரியனும்.

 

நான் எழுதி வைத்த ஸ்கிரிப்டோட எப் எம் ரூம்க்கு போனேன். வாவ் நான் ஜாக்கி சீட்ல இருக்கேன். எனக்கு முன்னாடி மயிக்...காற்றின் மொழி படம் சீன் மாதிரியே இருந்தது. வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு ஒரு அண்ணா இருந்தாங்க. அவரு கொஞ்சம் டென்ஷனாதான் இருந்தாரு, பிகாஸ் அப்போ ஆறு மணி ஆகபோது அவருக்கு வீட்டுக்கு போகனுமோ என்னவோ... நானும் கொஞ்சம் பயந்து போயிருந்தேன். எப்பவும் என்கிட்ட  இருக்கிற உற்சாகத்தை என்னோட பயம் தடுத்திருச்சு. இரண்டு கிளிப் எடுத்தாங்க. முதல் கிளிப் எழுதின ஸ்கிரிப்ட்ட பேசிட்டேன். இரண்டாவது "இன்றைய நாள் அனுபவத்தை சொல்ல சொன்னாங்க". அதையும் பாசிட்டிவிட்டியோட பேசினேன். இன்னும் ஒருதரவ அந்த அண்ணாவ ரெக்கார்ட் செய்ய சொல்லி கலகலப்பா பேசலாம்னு நினைத்தேன். வேண்டாம் ஏற்கனவே நிறைய பேர் சான்ஸ் கேட்டு அவருக்கு லேட் ஆகியிருக்கு நானும் அதை பன்ன வேண்டாம்னு அந்த அண்ணனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன். அங்க இருக்கிற மனிதர்களைப் பற்றி சொல்லனும்னா எல்லாருமே ஆண்கள்.  எங்க எல்லாரையும் ரொம்ப பத்திரமாக பார்த்துக்கிட்டாங்க. பிலாக் கலர் டிரெஸ் போட்ட பாடிகாட்ஸ்.  அங்கு எங்க போகனும் நாலும் அவங்கிட்ட இருக்க access card வைத்துதான் போக முடியும். எங்களை பத்திரமாக வழி அனுப்பி வைத்த கார்ட்ஸ்ஸுக்கு நன்றி.

 

அங்கு ஒரு பெண் ஏக்கத்துடன் கேட்ட கேள்வி நியாபகம் வந்தது. "செலக்ட் ஆனவர்களுக்கு எப்போ கால் பன்னுவீங்க?" அங்கு இருக்கிறவங்க சீக்கரமானு சொல்றோம்னு சொன்னாங்க. அதற்கு அந்த பெண் “எவளோ நாள்னு சொல்றீங்களானு கேட்டால்…” அதற்கு அவர் “ஒரு வாரம் ஆகலாம்னு” சொன்னாரு. அங்கு ஆடிஷ்ஷன் வந்த பெரும்பாலான பெண்கள் நிறைய வாட்டி வெவ்வேறு FMல டிரை பண்ணி செலக்ட் ஆகாதவங்க. சில பேர் 10 ஆடிஷ்ஷன். இன்னும் சில பேர் 20 ஆடிஷ்ஷன் போயிட்டு...FMல இருந்து கால் பண்ணமாடாங்க்லானு ஏங்கி போயிட்டு காத்திருந்த பெண்களாக தான் இருந்தாங்க. அவர்களுடைய கனவும் நிறை வேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.

 

மிகவும் சந்தோஷத்துடன் வீட்டுக்கு சென்றேன் நடந்தவை அனைத்தும் அம்மா அப்பா கிட்ட சொல்லி மகிழ்ந்தேன். கோர்ஸ்லா போகாம கடைசி ரவுண்ட் வரைக்கும் போயிருக்கியேனு பாராட்டினார் அப்பா. ஒரு வாரமா FMல இருந்து கால் வந்ததானு அம்மா கேட்டுக்கிட்டே இருந்தாங்க...கால் வரலனா என்ன? இந்த சுகமான அனுபவத்தை நினைக்க நினைக்க இனிக்குதே! ஜனவரி 25 என் வாழ்க்கைல மறக்க முடியாத நாளா மாறிடிச்சு. இந்த இனிமையான அனுபவத்தை கொடுத்த சூரியன் எப்எம்முக்கு நன்றி. RJ Lakshmiனு எனக்கு பெயர் வைத்த RJக்கு நன்றி.

“எட்டாத தூரத்தில் கனவு இருந்தாலும் எட்டாமல் மட்டும் இருக்காதே!”

Proof Reading செய்த தோழனுக்கு மனமார்ந்த நன்றி...Thank you Mohammed Muzammil😍





Comments

  1. Amazing. Wow it was so interesting and you have a very good flow in writing too. I enjoyed it. Keep writing more. All the best da.

    ReplyDelete
  2. Woahh! Appo Passionate Sindhu mattum illa... Aspiring RJ Sindhu va nee! Awesome d. Nee vena paaru indha alavku calm a, happy ya, thoughtful a, empathy oda iruka Sindhu will definitely win one day. We have a full lifetime ahead! Kandipa nee un life le minimum one week atleast RJ va work pannuva and ur voice will definitely be aired one day! A very thoughtful, observing and heartfelt post. I simply loved it!

    ReplyDelete
    Replies
    1. Akshaya your words are really encouraging Thank u so much✨💜✨

      Delete

Post a Comment

Popular posts from this blog

அவன் பார்வையில்... இவள்

ஏனோ…ஏக்கம்!