பரிசு

எந்த ஒரு சந்தோஷமான விஷயம் என்றாலும், அம்மா, இங்க வந்து 

நில்லுங்களேன். அப்பா, இங்க வாங்களேன் என்று இரண்டு பேரையும் வர வைத்து.

அவர்களை திகைக்க வைத்து. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்னு

ஆரம்பிக்கறது தான் வழக்கம்.


இப்படி சொன்ன அடுத்த நிமிஷம். ஏன் சிந்து ஒன்னு மட்டும்...ரெண்டு மூணு கூட

சொல்லுனு அம்மா  சொல்லுவாங்க. இப்படி விளையாடினாலும் என் முகத்தில்

இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் அவர்களையும் என்னோடு  சேர்ந்து வியக்க

வைக்கும்.


முதல் முதலாக  பள்ளி போட்டியில் வெற்றி பெற்றதையும்…

முதல் முதலாக நான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதையும்

முதல் முதலாக வகுப்பில் presentation எடுத்ததையும்

முதல் முதலாக கல்லூரியில் ஹோஸ்டிங் செய்ததையும்…

முதல் முதலாக கவிதை கிறுக்கியதையும்

முதல் முதலாக சுவையாக சமைத்ததையும்

முதல் முதலாக இன்டெர்ன்ஷிப் கிடைத்த விஷயத்தையும்..

முதல் முதலாக வேலை கிடைத்த விஷயத்தையும்

இவ்வாறு தான்  சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்….


இந்த மாதிரி எத்தனையோ முதன்முதல் சந்தோஷத்தில் என்னுடன்

இருந்து என்னை விட அதிகமான சந்தோஷம் அடைந்த என் அன்பான 

பெற்றோர்களே…


முதன்முதலாக என்னையே அறியாமல் என்னுளே ரகசியமாய் நுழைந்த காதலனை.

நான் எனக்கு கிடைத்த பரிசாய்  நினைக்கும் எனக்கானவரை உங்களிடம்

அழைத்து வந்தால்.

முன்பு என் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்தவாறு இப்போதும் மகிழ்வீர்களா…?


எந்த ஒரு பரிசு வாங்கினாலும் அதை ஒளித்து வைத்து...surprise ஆக காட்டுவதே

வழக்கம். மூன்றாம் வகுப்பில் பரிசு வாங்கிய பாத்திரங்களையும்..

பன்னிரெண்டாம் வகுப்பில் வாங்கிய பையையும்…அவ்வாரே ஒளித்து

surprise ஆக காண்பித்தேன்.

ஆச்சிரியத்துடன் நீங்களும் என்னுடன் சேர்ந்து உற்சாகம் அடைந்தீர்கள்.

இந்த முறை எனக்கு கிடைத்த பரிசை நான் ஒளித்துக் காட்டிட விருப்பப்படவில்லை.

ஏன் என்றால் இது என் திறமைக்கு கிடைத்த பரிசு இல்லையே...

இது என் அறத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு…


ஏனோ, அல்பத்தனமான ஆசைகள் என்னை விட்டு போகாமல் இருப்பதால்,

என் காதலனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் ஒரு ஆசை உண்டு...



காதலனின் மணிக்கட்டை வலிக்காதவாறு பிடித்து, அம்மா அப்பா விடம் அழைத்து

செல்ல வேண்டும்..அந்த கையை பிடிக்கையில் அவனுக்கு மறைமுகமாக 

நான் உணர்த்துவது. அம்மா அப்பா கண்டிப்பாக நம் காதலை ஏற்பார்கள் என்பதையும். எப்போதும் என் பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சியையே தரும் 

என்பதையும். அன்று நான் பிடித்த உன் கையை விட மாட்டேன்  என்பதையும்  உணர்த்தும்.



எப்போது பரிசு வாங்கினாலும் அந்த பரிசு கிடைத்த காரியத்தையும்,

நான் ஜெயித்த விஷயத்தையும் சொல்லி மகிழ்வேன் உங்களிடம்.

அவ்வாரே என்னுள் நடந்த மாற்றத்தையும்.

என் மனதின் போராட்டத்தையும் தவிர்க்க முடியாமல் என்னுள் வந்த காதலையும்

என் பரிசின் மகத்துவத்தையும் சொல்லி மகிழ்வேனா?



நீங்கள் என்னையும் என் பரிசையும் எப்போதும் மெச்சிக்கொள்வீர்கள்.

அவ்வாரே என் காதலனின் பண்பையும் அவன் மென்மையான 

குணத்தையும் இப்போதும் மெச்சிக்கொள்வீர்களா?


என் மகளின் திறமைக்கும் அவள் குணத்திற்கும் ஏற்றவாறே சிறந்த பரிசு

கிடைத்திற்கு என்று பெருமை படும் நீங்கள்.

இப்போதும் எங்கள் ஜோடி பொருத்தத்தை கண்டு பெருமை படுவீர்களா?


என் சந்தோஷத்தையும் என் வெற்றியையும் எப்போதும் தொலைபேசியில்

உறவினர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்...

அவ்வாரே இப்போதும் மகிழ்வீர்களா…??

என்னுள் நுழைந்த காதலை நான் கொண்டாடியவாறு நீங்களும் என்னுடன்

சேர்ந்து கொண்டாடுவீர்களா???


என் இனிய பெற்றோர்களே இதற்கு எல்லாம் எனக்கு பதில் அறிந்த்துக்கொள்ள

ஆசையாகத்தான் உள்ளது... என்ன செய்வது உங்களிடம் காண்பிக்க என்னிடம் பரிசு இல்லையே!!!... பரிசு எல்லாருக்கும் கிடைக்காதல்லவா?


இதை நான் எழுதுவதற்கு காரணம் அண்மையில்,

என் தோழி அவள் காதலனோடு அவர்கள் காதல் உறுதியான செய்தியை எங்கள் நட்பு 

கூட்டத்துடன் சொல்லி மகிழ்ந்தாள். என்னையே அறியாமல் என் கண்கள் கலங்கியது

ஆனந்தத்தில் ஒரு பத்து நிமிடங்கள் அழுதேன். கொஞ்ச நாளாகவே காதல் பிரிவு செய்தி மட்டும் கேட்ட எனக்கு ஒரு இனிய செய்தி வாய்த்தது. ஒரு வாரமாகவே நான் சந்தோஷத்தில் மகிழ்ந்தேன். ரொம்ப நாள் கழித்து ஆனந்த கண்ணீர் தந்த தோழிக்கு நன்றி.


இவ்வாறு என் வாழ்க்கையில் நடந்திருந்தால்,

என் கற்பனை போலவே  நான் நிஜத்தில்

நடந்திருப்பேனா என்று தெரியவில்லலை. கற்பனையும் அழகுதானே!!!

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அறுமையான பதிவு சிந்து அக்கா!❤

    ReplyDelete
  3. அருமையான பதிவு சிந்து 💓💓😍😍

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு

    ReplyDelete
  5. என்ன ஒரு சுவாரசியமான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவன் பார்வையில்... இவள்

ஏனோ…ஏக்கம்!